2௦16 – அரசியல் ரவுண்டப்

வெற்றிடம்

தனக்குப் பின் யார் என்பதை அறிவிக்காமல் வெற்றிடத்தை ஏன் உருவாக்குகிறார்கள் தலைவர்கள்? அரசியல் தந்திரமோ? 

கூட்டில் இருந்து பூச்சி தானே போராடி  வெளிவர வேண்டுமாம்… மற்றவர்கள் உதவினால் அவைகளால் உயிர் பிழைக்க முடியாதாம்… இதுதான் லாஜிக்-ஓ?

டிரம்ப்

அரசியல்வாதினா சும்மாவா? உலக அரசியலும் பேசுவோம்ல!

டிரம்ப் இன் வெற்றியில் சிலர் காட்டிய அதிர்ச்சி ஆச்சர்யமாய் இருந்தது. இரண்டு பேர் போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஜெயிப்பது உறுதி. பூவா? தலையா? என்பதை போலத்தானே? அய்யோ! தலை விழுநதிருச்சு! அய்யய்யோ ! என்று கதறுவது என்ன லாஜிக்? புரியவில்லை.

Brexit

இதுவும் டிரம்ப் வெற்றி போலத்தான். என்ன அதிர்ச்சி காண்பிக்கிறார்கள் போங்க? இளையவர்கள் Brexit க்கு எதிராக வாக்களித்தது எதிர்கால நம்பிக்கைய்ய்ய்…

புடின்

ஜேம்ஸ் பாண்ட் படம் போல இருக்கு. பயங்கர (அரசியல்)வாதி இவர்?

மோடி

2௦16இல் இவர் எடுத்த முடிவுகள் RSS போன்ற அமைப்புகளின் கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்டவையோ என்ற ஐயம் எழுகிறது…

இதன் விளைவாக பிஜேபி பல சவால்களை எதிர்கொள்ளப் போகிறது என்பது உறுதி. குறிப்பாக பிராந்திய கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் ஒற்றுமை… இனிவரும் நாடாளுமன்ற தேர்தல்களில் தனி பெரும்பான்மைக்கான  வாய்ப்பே இல்லையோ?

மோடி-அம்மா நட்பின்  வெளிபாடு: அதிமுக ஒற்றுமையாய் இருக்க அவர் விடுத்த மிரட்டல்கள்? சேகர் ரெட்டி – ராம் மோகன் ராவ…(ஹி ஹி…)

அம்மா

சாதனைகள்: கலைஞர்க்கு சரியான போட்டி … பலமுறை வெற்றி …2௦16 தேர்தல் வெற்றி …  கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் நிர்வகித்தது… துணிவு … பெண்களுக்கான role model… பெண்களின் பேராதரவு…

சறுக்கல்கள்: வெளிபபடைத்தன்மையின்மை…அதிகாரக் குவிப்பு…மதுக் கொள்கை … ஊழல் குற்றச்சாட்டுகள்… இலவசங்கள் … அம்மா தண்ணீர் விற்பனை… ஆணவக் கொலைகள் அலட்சியம்…இன்னும் பல…

சின்னம்மா

2௦16 தேர்தல் வெற்றி – கட்சி பொறுப்பு – கட்டுக்கோப்பு – ஸ்டாலின்னுக்கு  போட்டி – மதுவிலக்கு நம்பிக்கை – பிஜேபி க்கு சவால் – கோர்ட் கேஸ் – 2௦17 சவால்கள்

அவா:  அம்மாவை போலில்லாமல் ஊடகங்களுக்குப்  பேட்டி தரவேண்டும்.

(வேறு அடைமொழி கொடுக்கலாமே? ஏன் ‘அம்மா’ என்ற சொல்லைப் பாடாய் படுத்துகிறார்கள்?)

கலைஞர்

இன்னும் தனக்குப் பின் யார் என்பதில் குழப்பம்… 2௦16 தோல்வி… 2௦17லும் அறிக்கைகள் விடுவாரா?

 ஸ்டாலின்

எதையும் தாங்கும் இதயம்: வெற்றி பெற வேண்டிய தேர்தலில் தோல்வி. தலைமை -ஒரு  எட்டாக் கனி. ம்… இப்பதான் செயலுக்கே வந்திருக்கு…

வெந்த புண்ணில் வேல்: சசிகலாவுக்கு கட்சி பதவி. விரைவில் CM பதவி?

என்னமா இப்படி பண்றிங்களே மா….

வைகோ:

2௦16 தேர்தல் வெற்றி:  mission accomplished!

தேமுதிக:

இனி அண்ணி தலைவர்?!

பொன் வாக்கு:

ஆச்சர்யமான அரசியல்வாதி. அரசியலில் முன்னுக்குப் பின் முரணாய் பேசவேண்டும். ஆனால் இவரோ… இரண்டு வருடங்களாய் ஜல்லிக்கட்டு வந்துவிடும் என்று மோடி பொங்கல் வைக்கிறார். பிஜேபி-இன் நம்பிக்கை நட்சித்திரம். அந்த கணீர் குரலிலேதான் எவ்வளவு நம்பிக்கை… ம்ம்ம்…

அதிர்ச்சி :

கிரண் பேடி டெல்லி கவர்னர் என்று சில பத்திரிகைகளில் வந்தது… கிரண் பேடி மேல்  வைத்திருத்த கொஞ்சம் மதிப்பும் காணாமல் போனது.

பேடி (வடிவேலு போல)  தான் இருக்கின்ற மேடையில் இருந்தே கட்சி மாறியவர்… பாண்டிச்சேரி கவர்னர் ஆனதும்  முகம் சுளிக்கவைத்தது.

2௦17 – அதிரடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s