அண்ணன் என்னடா… தம்பி என்னடா…

ஸ்டாலின்: தமிழக அரசியலில் ஒரு வித்தியாசமான தலைவர். மக்களிடம் அதிகம் கெட்டப்பெயர் வாங்காமல் ஒரு கிளீன் இமேஜுடன் இருப்பது அதிசயம். 

2௦16 தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் மக்களிடம் அதிக செல்வாக்குடன் முதல்வர் பதவிக்கு தகுதியானவராக பார்க்கப்பட்டவர்.

ஆனால், அவரை திமுக முன்னிறுத்தாமல் தேர்தலில் குறைந்த மார்ஜினில் தோற்றது. ஆனால், தோல்வி தோல்விதானே. அதுவும் எப்படி – snatching defeat from the jaws of victory… (அவருக்கு ஓட்டு போட இருந்தேன்…ம்…)

ஸ்டாலினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அவர் the CM Tamilnadu never had… என்ற நிலை வருமா? (Designல என்ன இருக்குனு தெரியல. திராவிடக் கட்சிகள் டிசைன்-ஐ நம்புகின்றனவா? அதிமுகவில் ஆண்-பெண் இருபாலரும் நம்பிக்கை கொண்டவர்களாகத் தெரிகிறார்கள். திமுகவில் தான் குழப்பம். பெண்கள் நம்புகிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நம்பிக்கை இல்லை. என்னவோ போங்க…)

மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் கட்சித் தலைவராக முடியாத சூழல் – திமுகவின் சோகம்.

அதிமுகவின் கதையோ நேர் எதிர். மக்களிடம் அறிமுகமே இல்லாத ஒருவர் CM நாற்காலியை வெகு எளிதில் நெருங்கி விட்டார்.

மேலும், சசிகலவோ எதிர்ப்பவர்களையும் வசப்படுத்துவோம் என்று நம்பிக்கை விதைக்கிறார்…

ஸ்டாலினோ “உட்பகையைத் தீர்ப்போம்” என்று பீதியைக் கிளப்புகிறார்.

“அண்ணன் என்னடா… தம்பி என்னடா… தங்கை என்னடா ” – திமுக

“அக்கா என்னடா… தங்கை என்னடா” – அதிமுக

(அப்பன் என்னடா… புள்ள என்னடா” – சமாஜ்வாதி)

‘நமக்கு நாமே’ பரப்புரையையே வென்ற சசிகலா டீம் ஸ்டாலினுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. Exciting!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s